அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் 'தோட்டம் - தி டிமேன் ரிவீல்ட்'. ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார். அதிரடி, ஆக் ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த மெகா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளை 'தி ஷேடோ ஸ்டேரேஸ்', 'தி ரெய்ட் பிரான்சிஸ்', 'ஹாட்ஷாட்', 'தி நைட் கம் பார் அஸ்', 'தி பிக்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முகமது இர்பான் தலைமையிலான சர்வதேச ஆக்ஷன் டிசைன் குழுவினர் பணியாற்றி வருகிறார்கள்.
படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாளுகிறார். பர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், ஏவிஏ புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
'லோகா' படம் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய திருப்பத்தை தந்தது போன்று இந்த படம் தனக்கு திரும்பம் தரும் என நம்புகிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.




