மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பரசுராம் இயக்கி உள்ளார் . வருகின்ற மே 12ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டாராம் .
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, 'நடிக்கும்போது தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.