'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் மீனவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வந்தார் சூர்யா.
இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம். இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் அதற்கு முன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.