டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஆசிய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜாக்கி சான். தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது சில நாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு பிவர்லி ஹில்ஸ் பகுதியில் ஜாக்கி சான் தங்கி இருந்த அதே ஹோட்டலில் தான் தங்கி உள்ளார்.
இருவரும் அந்த ஹோட்டலில் முன்பகுதியில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஹிருத்திக் ரோஷன், “உங்களை இங்கே சந்தித்தது ரொம்பவே ஜாலியாக இருந்தது சார். என் உடைந்த எலும்புகள் உங்கள் உடைந்த எலும்பை பார்க்கின்றன.. என்றென்றும் எப்போதும்..” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஜாக்கி சானைப் போல நானும் சண்டைக் காட்சிகளில் அதிக முறை அடிபட்டு எலும்புகளை முறித்துக் கொண்டவன் தான் என்பதை தான் கிருத்திக் ரோஷன் குறிப்பிட்டுள்ளார் போலும்.