விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள '99 சாங்ஸ் வருகிற ஏப்ரல் 16 அன்று வெளியாகிறது. இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரவலான பாராட்டை பெற்றுள்ளது. இசையால் வாழ்க்கையை இழந்த ஒரு குடும்பத்தை அந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இளைஞன் எப்படி தூக்கி நிறுத்துகிறான் என்பதுதான் கதை. 100 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று போராடுகிற அவர் 99வது பாடல் உருவாக்கத்தின் போது எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் திரைக்கதை.
இதன் கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளார். டீசரை பார்த்த நெட்டிசன்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என்ற கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். 'தி தேவாரிஸ்ட்ஸ்' மற்றும் 'பிரிங் ஆன் தி நைட்' ஆல்பங்களை இயக்கிய விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஹன் பட், எடில்ஸி வர்காஸ் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்'ன் மையக் கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. என்றார்.