இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இசையோடு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இவற்றின் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆர்வம் அதிகம். அவர் எழுதியுள்ள 99சாங் என்ற கதையை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். இதை ஏ.ஆர்.ரஹ்மானே தயாரிக்கிறார்.
புதுமுகங்கள் எஹன் பட், எடில்சி வர்க்கீஸ் ஆகியோருடன் மனிஷா கொய்ராலா, லிசாரே, ஆதித்யா உள்ளிட்ட சீனியர்களும் நடித்துள்ளனர். இசை தொடர்பான இந்தப் படத்தில் 14 பாடல்கள் இடம்பெறுகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 16ந் தேதி தியேட்டரில் வெளியிடப்போவதாக ரஹ்மான் அறிவித்துள்ளார்.