சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

புகழ்பெற்ற அராபிய கதையான அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை, உலக மொழிகள் அனைத்திலும் சினிமாவாகி இருக்கிறது. அதை தழுவியும், அலாவுதீன் அற்புத விளக்கை மட்டும் மையமாக வைத்தும் பல படங்கள் உருவாகி உள்ளது. தமிழில் உருவான பட்டினத்தில் பூதம் படத்தில் அசோகன் பூதமாக நடித்திருந்தார்.
தற்போது இதே பாணியில் உருவாகும் படம் தான் ஆலம்பனா. பூதம் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை இது. எஜமானரே என்று பொருள். இதனை பாரி.கே.விஜய் இயக்கி உள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இதில் பூதத்தின் எஜமான் அலாவுதீனாக வைபவும், பூதமாக முனீஷ்காந்தும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்வதி நாயர், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.