'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ஒட்டன்சத்திரத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ராம்தாஸ். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ராம்தாஸ், முண்டாசுபட்டி படத்தில் முனீஷ்காந்த் என்ற கேரக்டரில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதோடு இவரது காமெடியும் பேசப்பட்டதால் இயற்பெயர் மறைந்து முனீஷ்காந்த் ஆனார்.
அதன்பிறகு ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவர், இன்று நேற்று நாளை, பசங்க 2, மாநகரம், மரகத நாணயம், ராட்சன், பேட்ட, வாட்ச்மேன், வால்டர், க.பெ.ரணசிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மிடில் கிளாஸ் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகி இருக்கிறார்.
இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்குகிறார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.
முனீஷ்காந்த் ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறார். ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் , குரைஷி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 27ம் தேதி தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.