ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
திருப்பூர் பனியன் தொழிற்சாலையின் பின்னணியில் ஏற்கெனவே சில தமிழ் படங்கள் உருவாகி இருக்கிறது. தற்போது உருவாகும் படத்திற்கு குதூகலம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரேட் அண்ட் கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு தயாரிக்கிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி படங்களில் உதவி இயக்குனாக பணியாற்றிய உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.
கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவர் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, மன்மோகித், பிரேமி, எம்.சுகின்பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். பியான் சர்ராவ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமாரின் உதவியாளர், மணிபெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் கூறியதாவது : இளைஞன் ஒருவன், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை, எப்படி எதிர் கொள்கிறான் என்பது படத்தின் கதை. திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில், நகைச்சுவையுடன் படம் உருவாகிறது. என்கிறார்.