'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானார். அதன்பிறகு இங்கு சில படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும், கன்னடத்திலும் அதிக படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆதம் ஜான்' என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்த மலையாள படம்.
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.