ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் |

காமெடியன்கள் ஒரு கட்டத்தில் ஹீரோ ஆவது தமிழ் சினிமாவில் வாடிக்கைதான். வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு ஆகியோர் வரிசையில் 'மிடில்கிளாஸ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் முனிஸ்காந்த். ஆனால் பட நிகழ்ச்சிகளில், புரமோஷன்களில் ''என்னை ஹீரோ என்று குறிப்பிட வேண்டாம். கதை நாயகன்னு சொல்லுங்க. பல படங்களில் காமெடியனாக நடிச்சிட்டு இருக்கிறேன். ரொம்ப கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறி இருக்கிறேன். என் பிழைப்புல மண் அள்ளி போட்டுவிடாதீங்க'' என்கிறார்.
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்த 'மரகதநாணயம்' உள்ளிட்ட பல படங்களில் முனிஸ்காந்த் காமெடியனாக நடித்து இருக்கிறார். ஆகவே, இந்த படத்துக்கு அதிக சம்பளம் வேண்டாம் என்று நினைத்தாராம். ஆனால், அந்த பட நிறுவனத்தை தொடங்கி, சமீபத்தில் மறைந்த டில்லிபாபு சம்பளத்தை குறைக்காமல் அவர் மார்க்கெட் தக்கபடி கொடுத்தாராம். அதேபோல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அகத்தியன் மகளும், 'சென்னை 28, அஞ்சாதே' படங்களில் நடித்தவருமான விஜயலட்சுமி, இந்த படத்துக்குபின் நடிக்கமாட்டேன். நிறைய கமிட்மென்ட் இருக்குது என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.




