தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு |
கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ரீவைண்ட் என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்ரல் 16ம் தேதி கன்னடத்தில் ரிலீஸாகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த நான்கு வருட இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட் என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இதுதவிர தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் . அதாவது 'குளோரி ஆப் டான்' என்பதன் சுருக்கம் தான் அது. என்றார்.