ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் மண்டேலா. அவருடன் ஷீலா ராஜ்குமார், கனிகா ரவி, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலாஜி மோகன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டூடியோ சசி வெளியிடுகிறார்.
முழுக்க முழுக்க காமெடி படமான இது ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று டீசர் வெளியாகிறது.
ஒய் நாட் சசி இதற்கு முன்பு வெளியிட்ட ஏலே படத்தை தியேட்டர்காரர்களின் எதிர்ப்பு காரணமாக நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டு அதன் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட்டார். அதே போன்று இந்த படத்தையும் விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டு அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.