தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஈ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜனநாதனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. ரத்த கசிவை நீக்க டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
விஜய்பேதுபதி அடிக்கடி டாக்டர்களுடன் பேசி வருகிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வெளிநாட்டு டாக்டர்களை வேண்டுமானாலும் வரவழையுங்கள் என்று அவர் கூறி வருகிறார். இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார்கள். ஜனநாதன் உயிர்பிழைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.