நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதற்குப் பிறகு “அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக துக்ளக் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அரண்மனை, மேதாவி, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த கடந்த வருடத்தில் தன்னை சைவத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். அது பற்றி அவர் கூறுகையில், “ஒரு ஆயுர்வேத புத்தகத்தை லாக்டவுன் காலத்தில் படித்தேன். நான்-வெஜ் சாப்பிடாமலேயே ஒருவர் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் அதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அதை பின்பற்ற ஆரம்பித்ததும் முழுவதுமாக பலனளித்ததைப் பார்த்தேன். சைவ உணவு எனது உடலை மட்டுமல்ல எனது மனநலத்திலும் நலமாக உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் சைவமாக இருந்த ராஷி, அதன்பின் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட ஆரம்பித்தாராம். தற்போது மீண்டும் சைவ உணவுக்கே மாறிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.