திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

கயல் விளையாடும் கண்களிரண்டும் ஒளி உறவாடும் விளக்குகள்...
தேன் வழிந்தோடும் இதழ் இரண்டும் கனி இலையாடும் இனிப்புகள்...
தங்கம் தகதகக்கும் கன்னம் இரண்டிலும் ரோஜா இழையோடும் மென்மை,
நிலவில் செதுக்கிய தேகமெங்கும் ஆனந்தம் அலையாடும் பெண்மை,
பட்டாசுக்கு நோ சொல்லும் பட்டாம்பூச்சி, அழகால் ஆடுகிறாளே கண்ணாமூச்சி... என கவிதை குதிரையை பறக்க விடும் நடிகை ராஷி கண்ணா தீபாவளி மலருக்காக மனம் திறக்கிறார்...
உங்க தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் எப்படி?
வட மாநிலங்களில் விளக்கு ஏற்றி ரொம்ப பெரிய கொண்டாட்டமாக இருக்கும். நானும் எப்பவும் வீட்டில் கொண்டாடுவேன். 'சர்தார்' ரிலீஸ் ஆவதால் எனக்கு ஸ்பெஷல் தீபாவளியாக தான் இருக்க போகுது. அம்மா செய்யும் அல்வா டேஸ்டா இருக்கும்.
நீங்கள் கலெக்டர் ஆக ஆசை பட்டிங்க போல?
ஆமா உண்மை... ஆனால், நடிகை ஆனதில் ஹேப்பி தான். எந்த துறையில் இருந்தாலும் நாட்டுக்கு முடிந்தளவு நல்லது செய்யணும். நானும் சில உதவிகள் முடிந்த வரை பண்றேன்.

முதன்முறையாக நடிகர் கார்த்தியுடன் 'சர்தார்?'
இயக்குனர் மித்ரனின் 'இரும்புத்திரை' ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி அவரின் 'சர்தார்' கதை ஒரு திரில்லர் கதை தான்; கேட்டதும் பிடிச்சிருச்சு. கார்த்தி கேரக்டர் நிறைய வித்தியாசம் இருக்கு. அவரது ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடுவர்.
படத்தில் உங்கள் வழக்கறிஞர் கேரக்டர் பற்றி?
தெலுங்கில் வழக்கறிஞர் கேரக்டர் பண்ணியிருக்கேன். சர்தாரில் ஷாலினி என்ற பெயரில் மீண்டும் வழக்கறிஞராக, சமூகத்தின் சில விஷயங்களுக்காக போராடும்படி நடிச்சிருக்கேன். வசனம் நல்லா எழுதியிருக்காங்க; ஒரு டீச்சரிடம் தமிழ் கத்துக்கிட்டு இப்போ நல்லா பேசுறேன்.
நான்கு மொழிகளிலும் நடிப்பில் பிஸியாக...?
ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்களை தக்க வைத்து கொள்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. முடிந்த வரை நல்ல படங்களில் நடிக்கணும்னு தான் என் கனவு. ஹிந்தி என்னுடைய தாய் மொழி என்பதால், ஹிந்தியில் நடிக்க ஈஸியா இருக்கு; தெலுங்கும் நான் கத்துக்கிட்டேன்.

'திருச்சிற்றம்பலம்' படம் பற்றிக் கொஞ்சம்...?
என் கேரக்டர் மக்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதான்னு யோசித்து நடித்த படம் இது. தனுஷ் பெரும் நம்பிக்கை கொடுத்தார். மக்களுக்கு உங்கள் கேரக்டர் பிடிக்கும், புரியும்; தைரியமா பண்ணுங்க' என நம்பிக்கை கொடுத்தார். 'மேகம் கருக்காதா...' பாடலில் நித்யா மேனன் உடன் இணைந்து நடித்தேன்; சிறந்த நடிகை அவர். நானும் இயக்குனராக ஆர்வமாக உள்ளேன்.
'பொன்னியின் செல்வன்' கலக்கிய த்ரிஷா?
இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் ஸ்ட்ராங்காக இருக்காங்க. 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தேன். முதல் படத்தில் இருந்த மாதிரியே இப்பவும் அழகா இருக்காங்க. அவரை பார்த்து ஆச்சரியப்பட்டேன். 'தினமலர்' வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஹேப்பி தீபாவளி.