ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இளசுகளின் நெஞ்சுக்குழியில் பல்லாங்குழியாடும் கன்னக்குழிகள்...
பட்டாம் பூச்சி கூட்டத்திற்கே பறக்க கற்றுத்தரும் பறக்கும் வழிகள்...
உன் இதழ்கள் உச்சரிக்க வேண்டும் என நச்சரிக்கும் உலகின் மொழிகள், நடக்கும் இடங்களில் எல்லாம் நில்லாமல் நீந்துமே நிலவின் ஒளிகள்,
சின்ன சிரிப்பில் தெறித்து சிதறும் இனிக்கும் மழை துளிகள்...
என அழகில் மயக்கும் நடிகை சித்தி இதானி மனம் திறந்த நிமிடங்கள்....
இந்த ஆண்டு தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?
இந்த தீபாவளிக்கு முத்தையா இயக்கும் படத்திற்காக கோவில்பட்டியில் நடிக்கும் ஷூட்டிங்கில் இருப்பேன்.
உங்களோட சின்ன வயசு தீபாவளி குறித்து?
என் குடும்பமே பெரிய குடும்பம்... அம்மா உடன் பிறந்தவங்க 6 சகோதரிகள். ஒவ்வொரு பண்டிகையும் எல்லோரும் சேர்ந்து தான் பெரிய அளவுக்கு கொண்டாடுவோம். ரங்கோலி, வீடெல்லாம் தீபங்கள் என களைகட்டும். வெளியே ஹோட்டலுக்கு போய் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவோம், நிறைய பேசுவோம்; ஐ லவ் தீபாவளி.
உங்க சினிமா பயண துவக்கம் எப்படி இருக்கு?
எதுவுமே என் வாழ்க்கையில இதற்கு பின் இது, அதற்கு பின் அது என திட்டமிட்டது இல்லை. அதுவாக அமைவதை ஏற்று கொள்வேன். எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. எல்லாம் அவர் காட்டும் வழி தான்...
மும்பை டூ சென்னைக்கு என தமிழ் சினிமா அனுபவம்...?
கொஞ்சம் மொழி பிரச்னை இருக்கு. தமிழக மக்களின் அன்பை, ஆதரவை, வரவேற்பை பெறுவது ரொம்பவே கஷ்டம். சிம்பிளா சொன்னால் அவர்களிடம் என்னை கொடுத்து விட்டேன். இனி நான் நல்ல பெயர் எடுக்க வேண்டும். சென்னையை இப்போது என் பிறந்த வீடு போல உணர்கிறேன்..
இவ்வளவு விரைவாக எப்படி தமிழ் கற்றீர்கள்?
இப்போ தான் கற்றேன்... மொழி தெரிந்து நடித்தால் உணர்வுபூர்வமாக இருக்கும். எல்லோரிடமும் புரிந்து பேசலாம். அதனால் விரும்பியே தமிழ் பேச கற்றேன்; படப்பிடிப்பு தளத்தில் தமிழில் தான் பேசுவேன்
தமிழ் படங்களில் நடிக்கும் அனுபவம் எப்படி?
தெலுங்கில், குஜராத்தியில் நடித்தேன். அப்போ சினிமா குறித்து தெரியாது. ஆனால், இப்போது லைட் எங்க வைக்கிறாங்க, இவங்க எப்படி நடிக்கிறாங்க, எப்படி டயலாக் பேசுறாங்க, கேமராமேன் என்ன பண்றாங்கன்னு ஒரு உதவி இயக்குனர் போல கவனிக்கிறேன். நடிகையா வந்து போகாமல் சில விஷயங்களை கொஞ்சம் கேட்டு தெரிஞ்சுப்பேன்... ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.