அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி | சினிமா நாயகன் ஆனார் டிவி நடிகர் பிரணவ் மோகனன் | திரிஷாவுக்கு என்னாச்சு? எதுவும் பேசுவது இல்லையே... | 'திரெளபதி 2' படத்துக்காக எடை கூடினேன்: ரக்ஷனா இந்துசூடன் | தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா | பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர் | நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் |

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான 'சூப்பர்மேன்' கடந்த 11ம் தேதி வெளியானது. தற்போது இந்த படம் நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் மேனாக டேவிட் கோரன்ஸ்வெட், வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகியாக லூயிஸ் லேன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பாலிவுட் நடிகை ஷ்ரேயா தன்வந்திரியும் நடித்துள்ளார்.
இந்தியாவில் இந்த படம் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்தில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயா தன்வந்திரி நடித்திருந்த முத்தக் காட்சிகளை நீக்கி விட்டனர்.
இதுகுறித்து ஷ்ரேயா தன்வந்திரி தணிக்கை குழுவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் 33 வினாடிகள் ஓடக்கூடிய எனது முத்தக்காட்சியைத் தணிக்கை குழு நீக்கியுள்ளது முட்டாள்தனமானது. விரும்புவதைப் பார்த்து ரசிக்கக்கூட ரசிகர்களுக்கு உரிமை கிடையாதா? இப்படி செய்வது அநியாயம். வயதான நடிகர்கள், இளம் நடிகைகளுடன் காதல் செய்யலாம். ஆனால் நடிகைகள் வயதாகிவிட்டால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்தப்போக்கு சினிமாவில் மாறவேண்டும். என்கிறார்.