6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி |

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'கிங்டம்' படம் ஜூலை 31ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதனிடையே, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு அவரும் புரமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'பேமிலி ஸ்டார்' படம் சரியாகப் போகவில்லை. எனவே, இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். தமிழ், ஹிந்தியிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.




