மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து முடிவடைந்திருக்கிறது.
இந்த நிலையில், ஜூலை 23ம் தேதி தனது பிறந்த நாளை தனது பெற்றோருடன் கொண்டாடுவதற்கு சென்னை வந்துள்ளார் சூர்யா. அதோடு, சூர்யாவின் இந்த 50வது பிறந்தநாளில் அவர் நடித்திருக்கும் கருப்பு படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதனுடன் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளனர். மேலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 46 படத்தின் போஸ்டரும் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.