படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கடந்த 2019ல் நிவின்பாலி, நயன்தாரா ஜோடியாக இணைந்து நடித்த லவ் ஆக் ஷன் ட்ராமா என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து தற்போது இவர்கள் இருவரும் மலையாளத்தில் உருவாகி வரும் டியர் ஸ்டூடன்ட்ஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவராக நடிகர் நிவின் பாலியும் இந்த படத்தை இணைந்து தயாரித்து உள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பள்ளிக்கூட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது என்றாலும் கூட நாம் நினைப்பது போல நயன்தாராவுக்கு இந்த படத்தில் டீச்சர் வேலை எல்லாம் இல்லை. அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. சண்டைக்காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார் என்பதும் டீஸரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நிச்சயமாக லவ் ஆக் ஷன் ட்ராமா படம் போல இந்த படமும் இளைஞர்களை வசீகரிக்கும் என உறுதியாக நம்பலாம்.