கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளுமா? அள்ளாதா? என்பதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. இது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தால் '' கூலி படத்தின் முதல் நாள் வசூல் 151 கூட, நேற்று 100 கோடிவரை வசூலித்திருக்க வாய்ப்பு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் 450 முதல் 500 கோடி வரை தொடலாம்.
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. ஆனாலும், கூலி படம் இன்னொரு வகையில் ஆயிரம் கோடி என்ற வசூல் சாதனையை ஈஸியாக எட்டிவிடும். இதுவரை அந்த படம் 575 கோடிவரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, மற்ற மொழி ரீமேக், டப்பிங் மற்றும் தியேட்டர் ரைட்சை சேர்ந்தால் சில வாரங்களில் அல்லது இந்த வார இறுதியில் ஆயிரம் கோடி பிஸினஸ் ஆன படம் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு.
அப்படிப்பட்ட விளம்பரம் விரைவில் வரலாம். அதற்காக வெற்றி விழா எடுக்கப்படலாம். பார்ட்டி கொடுக்கப்படலாம். எப்படியாவது கூலியை ஆயிரம் கோடி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று படக்குழு விரும்புவதால் ஏதாவது ஒருவகையில் அதை செய்வார்கள். கூலி ரிலீஸ் நாளில் பெங்களூரில் இருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிட்டார். தனக்கு நெருக்கமான தியேட்டர் அதிபர்கள், வினியோகதஸ்களிடம் கூலி வசூல் நிலவரம், மக்கள் கருத்து குறித்து போனில் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கிறாராம்.