பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் |

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகி அவ்வப்போது இடைவெளிவிட்டு நடந்து வருகிறது. சென்னை, கேரளா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு படப்பிடிப்பும் இந்த வருடம் டிசம்பர் மாதம் முடிவடைய உள்ளது.
அடுத்த வருடம் தமிழ் வருடப் பிறப்புக்கு அல்லது கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் படம் 2026 ஜூன் மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக ஐந்து மாதங்கள் வரை எடுத்துக் கொள்ள உள்ளார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சூராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.




