பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

1987ம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த "மனிதன்". எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி உடன் சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்தனர். ஏவிஎம் தயாரித்தது. சந்திர போஸ் இசையில் இதில் இடம்பெற்ற ‛‛மனிதன் .... மனிதன்..., வானத்த பாத்தேன்..., காளை... காளை..., ஏதோ நடக்கிறது ...., முத்து முத்து பெண்ணே...'' ஆகிய பாடல்கள் ஹிட்டாகின.
ரஜினிகாந்த் சினிமாவில் பொன்விழா ஆண்டினை கொண்டாடி வருகிறார். அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு " மனிதன்" திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் மனிதன் படத்தை இப்போது ரிலீஸ் செய்கிறது.