இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மலையாளத்தில் தற்போது மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் 'பேட்ரியாட்'. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் பஹத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிப்பதால் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகி வருகிறது.
'விஸ்வரூபம்' பட எடிட்டரும் மலையாளத்தில் 'டேக் ஆப், சி யு சூன், மாலிக்' உள்ளிட்ட பஹத் பாசில் நடித்த படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ராணுவ பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் கூட சில நாட்கள் நடைபெற்றுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் வெளியாகும்போது நிச்சயமாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.