'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிஸியான பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாடகி சின்மயி-ன் கணவருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தை இவ்வருட செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' படத்தையும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அனுஷ்கா, ராஷ்மிகா படங்கள் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.