இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
ஒளி கீற்றுகளாய் கூர் பார்வை, வர்ண ஜாலத்தில் வடித்தெடுத்த பொன்மேனி, சொல்லி மாளாத நளினங்களின் நாணத்தால் சிவக்கும் அழகு ஓவியமாய் விழிகள் நிறைக்கும்வித்தகியாக' தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருபவர், நடிகை வாணி போஜன். ஸ்டார் ஹீரோயின்கள் வரிசையை எட்டிப் பிடித்து பிஸியாக உள்ள இவர், தினமலர் தீபாவளி மலர் பேட்டி என்றதும் 'வா...வ்' எனக் கூறி 'கம்பி மத்தாப்பாய்' மின்னி மலர்ந்த தருணங்கள்…
சினிமாவிற்கு முன் பின்…
பிறந்து வளர்ந்து படித்தது ஊட்டி. ஏர் லைனில் தான் முதல் பணி. மாடலிங் மூலம் சின்னத்திரை டூ சினிமாவிற்கு வந்தேன்.
நடிகையானது…
இது ஒரு 'அக்ஸிடென்ட்'. சினிமாவை நினைத்து கூட பார்க்கவில்லை. டிவி சீரியல் கொஞ்சம் 'சேப்டி' என தெரிந்ததால் அங்கு சென்றேன்.
கைவசம் உள்ள படங்கள்
பகைவனுக்கு அருள், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர்க்குருவி உள்ளிட்ட சில படங்கள்.
சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் சாதிப்பது சவாலா
நடிகைகளுக்கு சினிமாவில் ஒரு இடம் கிடைப்பது வரை கஷ்டம் தான். சின்னத்திரையில் இருந்து வருவோருக்கு நல்ல 'பிரேக்' கிடைத்தால் தான் சினிமாவில் அந்த இடம் கிடைக்கும். சினிமாவில் அந்த போராட்டம் இருப்பது உண்மையே.
மாறுபட்ட ரோலில் நடிக்கும் வாணியை பார்க்கலாமா
விரைவில் பார்க்கலாம். சாய் பல்லவி நடித்த 'கார்கி', ஹிந்தியில் வெளியான'கங்குபாய்' படங்கள் போல் யதார்த்தமான ரோலில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். தற்போது பரத்துடன் நடித்து வரும் 'மிரள்'லில் அதற்கான முயற்சி எடுத்துள்ளேன்.
'இன்ஸ்டா'வில் செம பிஸியா இருக்கீங்களே…
எண்ண உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தும் நல்ல களம் இது. 2.3 மில்லியன்ஸ் 'பாலோவர்ஸ்' எனக்கு உள்ளனர்.
'இன்ஸ்டா ஜொள்ளர்'களை எப்படி சமாளிக்கிறீங்க…
சிலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்புகின்றனர். அவர்களை பிளாக் செய்து கடந்துவிடுவேன்.
உங்களை சின்ன நயன்தாரா, ஏஞ்சலினா ஜூலி என ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே
சந்தோஷமே. போன ஜென்மத்தில்நான் கொடுத்து வச்சிருக்கணும். கடவுளுக்கு நன்றி.
பாதித்த விஷயம்…
ஷேர், லைக்ஸ் பெற சில சேனல்கள் இல்லாதது பொல்லாததை சொல்லி வளர்ந்து வரும் நடிகைகள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன. என்னை பற்றி கூட 'லிவ்விங் டூகெதரில்' இருக்கிறார் என கிளப்பி விட்டனர். இதுபோன்ற சம்பவம் கஷ்டமாக உள்ளது.
சினிமாவில் மறக்க முடியாதவர்
ஒரு சீரியலில் நடித்ததன் மூலம் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா பழக்கமானார். அவர் தான் சீரியலில் நடித்த என்னை பார்த்து 'உனக்கு சினிமா தான் சரியாக இருக்கும்' என வழிகாட்டியவர்.
வெப் சீரிஸிலும் கலக்குறீங்களாமே…
'உமன் பொலிட்டிக்கல் டிராமா' என்ற வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ளேன். முழுவதும் அரசியல் நெடி தான் அடிக்கும். விரைவில் வெளிவர உள்ளது.
இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்கள்
சென்னையில் தாங்க. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்துடன் சும்மா பட்டைய கிளப்பும் நாளாக எங்களுக்கு தீபாவளி ஜொலிக்கும். ஊட்டியில் இருந்தபோது குளிர் காரணமாக நமத்து போய் பட்டாசு வெடிக்க முடியாமல் தவித்த நினைவுகள் வந்து போகும். அந்த ஒருநாள் விதவிதமான ஸ்வீட்களை வெளுத்து வாங்குவோம். பட்டாசும், ஸ்வீட்டுமாய் அந்த நாள் கழியும்.
ரசிகர்களுக்கு 'ஹேப்பி தீபாவளி'.