சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

என்ன பார்க்குறீங்க? இப்படி மழை அடித்தால் எப்படி குடை பிடிப்பேன்னு சொல்ற மாதிரி, இப்படி அழகாக இருந்தால் வர்ணித்து பாட்டு பாடத் தானே தோன்றும்... நடிப்பு, டான்ஸ், பிட்னஸ் என 'பிஸி'யாக இருந்தாலும், இன்ஸ்டா 'ரீல்ஸில்' நம் இதயங்களை திருடும் 'குயின்ஸ்'களாக வலம் வரும் 'ராக்கிங் டான்ஸர் ரேமா', 'வைரல் பியூட்டி சரண்யா', 'லவ்விங் ஸ்டார் லாஸியா' ஆகியோரிடம் குட்டி பேட்டி எடுக்கலாம் வாங்க...
'லவ்விங் ஸ்டார்' லாஸியா
சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு... எம்.பி.ஏ., படித்ததும் கொரோனா ஊரடங்கு வந்திருச்சு. எனக்கு தமிழ் சினிமா பாட்டு பிடிக்கும் என்பதால் இன்ஸ்டாவில் 'பொண்ணு ஆஷ்' என்ற என் செல்ல பெயரில் ரீல்ஸ் பண்ண ஆரம்பித்தேன். பழைய பாடல் பாடி, நடித்து பண்ணின ரீல்ஸ் நல்ல ரீச் ஆனது.

அதை பார்த்து நிறைய இயக்குனர்கள் நடிக்க கூப்பிட்டாங்க. இப்போ 'சைரன்' என்ற கிரைம், திரில்லர் படத்தில் அறிமுகம் ஆகுறேன். அஸ்வதி என்ற என் பெயரையும் லாஸியா என்று மாற்றி விட்டேன். அடுத்தது தமிழில் சரத்குமார் நடிக்கும் படத்தில் ஒரு ஐ.டி., நிறுவன பணியாளராக நடிக்கிறேன். என்ன தான் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரீல்ஸ் ஒரு பக்கம் செய்துட்டு இருக்கேன். 1 மில்லியன் பாலோவர்ஸ் வந்துட்டாங்க. இரண்டு படங்கள் நடிப்பதால் இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளி தான்...
'வைரல் பியூட்டி' சரண்யா
வழக்கம்போல் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர், மாடலிங்... சிறப்பாக போகுது. டிவிக்கு பின் சினிமா தானேனு முயற்சி செய்து லட்சுமி மேனன் நடித்த ஏ.ஜி.பி.,' உட்பட சில படங்களில் நடித்தேன். இப்போ பிரபல இயக்குனரின் படம் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடிக்க போறேன். ஒரு படத்தில் ஒரு கேரக்டர் நடித்தால் அதே கேரக்டர் தான் அடுத்த படங்களில் தராங்க. இது தமிழ் சினிமாவின் சாபம்.

வேற கேரக்டர்கள் தந்தால் மறைந்து கிடக்கும் திறமைகளை நிரூபிக்கலாமே... கொரோனா ஊரடங்கில் விதவிதமா போட்டோ ஷூட் பண்ண ஆரம்பித்தேன். சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூரில் அருவி பகுதியில் பண்ணின ஷூட் வைரல் ஆனது. அடுத்த ஷூட் போயிட்டு இருக்கு... அப்புறம் என்னை மாதிரி தீபாவளிக்கு குலோப் ஜாமூன் சாப்பிட்டு, மொட்டை மாடியில் நின்று வானத்தில் சிதறும் பட்டாசுகளை ரசித்து கொண்டாடுங்க.
'ராக்கிங் டான்ஸர்' ரேமா
சில சீரியல்களில் நடிச்சுட்டு இப்போ 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' டிவி ஷோவில் பிஸி. சின்ன வயதில் பரதம் கற்ற நான் சாண்டி, ஸ்ரீதர் என பிரபல மாஸ்டர்களிடம் டான்ஸ் ஆடியதால் பல வகை டான்ஸ் அத்துப்படி. சினிமாவில் எதிர்பார்க்கும் கேரக்டர் கிடைக்காததால் வெயிட்டிங். மேக்கோவர் அகாடமி வைத்திருப்பதால் மேக்கப், டிரெயினிங் ஒரு பக்கம் போகுது. பரீனா, வைசாலி தணிகா, ஸ்ரீதேவி, சாய் காயத்ரி, பவித்ரா ஜனனி என சீரியல் ஹீரோயின்களுக்கு மேக்கப், ஷூட் பண்ணினேன்.

மல்டிமீடியா டெக்னலாஜி படிப்பதால் சினிமா, சீரியலில் முழுநேரம் பயணிக்க போறேன். சொந்த ஊர் மதுரைக்கு வந்தாலே மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வைப்பேன். வீட்டு மொட்டை மாடியில் அதிக ரீல்ஸ் பண்ணி 'மாடி பேமஸ்' ஆயிடுச்சு. சென்னையில் இருப்பதால் மதுரையை மிஸ் பண்றேன். 'தினமலர்' வாசகர்களுக்கு ஹேப்பி தீபாவளி...