‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

‛அமரன்' படத்திற்கு பின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் 55வது படத்தை இயக்குகிறார். இதை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் அப்டேட்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்தார்.
இதையடுத்து கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா இணைந்தார். இப்போது இன்னொரு நாயகியாக சாய் பல்லவியும் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், சாய் பல்லவி ஜோடி இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளியான ‛ரவுடி பேபி' பாடல் 1727 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல அமரன் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.