மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி |

நடிகர் கருணாஸின் மகன் கென் முதல்முறையாக இயக்குனராக 'யூத்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வென்ஜரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் என கூறப்பட்டது. இந்த நிலையில் யூத் படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர்.




