காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
துபாயில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு சமீபத்தில் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கலம்பம் திரும்பிய ராஜலட்சுமி கூறியதாவது :
என்ன தான் படித்தாலும் பாரம்பரியம், பண்பாட்டை நம் மக்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. சிறிய வயதில் கிராமிய கலைகள் மீது எனக்கு ஆர்வம். அதுவும் மனிதனின் துவக்கம் முதல் முடிவு வரை அவனை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் கிராமியநாட்டுப்புற பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான். அதனால் அதனை கற்று கொள்ள துவங்கினேன். படித்து முடித்து பத்தாண்டுகளுக்கும் மேலாக கலைநிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறேன். செந்தில்கணேஷும் இசைக்கல்வியை முடித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு அவங்க ஊரில் நடந்த கிராமிய கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தான் சந்தித்தோம்.
கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, நாட்டுப்புற பாடல்களை பாடுவது சைடு தொழில் இல்லை. முழு மூச்சாக இதை தான் செய்கிறோம். எதையும் விரும்பி ரசித்து செய்யும் போது சிறப்பாக அமையும். அதுதான் எங்களை உயர்த்தியிருக்கிறது. மக்களுக்கு என்ன தேவையோ அதை புரிந்து அதே நேரத்தில் நம் பாரம்பரியம், பண்பாட்டு, பழமைமாறாமல் கொடுக்கிறோம்.
மூன்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற இடத்திற்கு அழைத்திருந்தனர். வழக்கமாக விழா ஏற்பாட்டாளர்கள் உடன் வருவர். ஆனால் அந்த முறை நாங்கள் இருவர் மட்டுமே இருபது மணி நேரம் விமானத்தில் பயணித்து சென்றோம். மதியம் தான் நாங்கள் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது. அங்கு சென்றதும் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அங்கு பரிமாறிய ரசம் சாதத்தை சாப்பிட்டு கச்சேரியை துவக்கினோம். சினிமா வாய்ப்புகளும் வருகின்றன. செந்தில்கணேஷ் கூட கரிமுகன் என்ற சினிமாவில் நடித்தார். தொடர்ந்து சினிமாத்துறையில் இறங்குவோமா என்பது கடவுள் விட்ட வழி.
'என்ன மச்சான்... என்ன புள்ள...' என்ற பாடலையடுத்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ஏய் சாமி, சாமி...' என்ற பாடல் இந்தளவுக்கு வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கவில்லை. விஸ்வாசம், அசுரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் டூயட் பாடல்களாக தான் பாடியிருக்கிறேன். எங்களை பொறுத்தவரை தாய் வீடு மக்கள் இசை தான்.
திரைப்பட பாடல்கள் கிடைப்பது போனஸ் போன்றது தான். தீபாவளி, பொங்கல், குழந்தைகளின் பிறந்த நாட்களில் எங்கே சென்றிருந்தாலும் எங்கள் வீடு அல்லது செந்தில் கணேஷ் வீடு திரும்பி விடுவோம்.
எந்த வேலையையும் பிடித்து நம்பி செய்ய வேண்டும். அதனால் தான் கிராமிய கலைஞர்களை கலாசார துாதர்களாக மக்கள் கருதுகின்றனர். நம் மண்ணோட அடையாளம் இந்த மக்கள் இசை, நாட்டுப்புறப் பாடல்கள். அதை இறுதி வரை தொடர வேண்டும் என்பது தான் ஆசை.