Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

02 பிப், 2026 - 03:28 IST
எழுத்தின் அளவு:
Arjun,-AGS-film-shooting-completes
Advertisement

தமிழ் சினிமாவில் ஆக் ஷன் கிங் ஆக வலம் வருபவர் அர்ஜூன். கதாநாயகனாக 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணச்சித்ர வேடங்களிலும் நடிக்கிறார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தங்களது 28வது படமாக தயாரிக்கின்றனர். பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‛விருமாண்டி' புகழ் அபிராமி நடிக்கிறார். இவர்களது மகள் கதாபாத்திரத்தில் ஸ்டார் படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.

ஆக் ஷன், பேமிலி டிராமா ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடந்து வந்தது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?புருஷன் படத்தின் படப்பிடிப்பு ... நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா நம்பிக்கையுடன் காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap