'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் வாணி போஜன். தற்போது சசிகுமார், விக்ரம் பிரபு, ஜெய், பரத் என இரண்டாம் மூன்றாம் நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸில் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தவகையில் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் வாணிபோஜன். இன்னும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் வாணி போஜன்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாணி போஜன் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக கதைகளையும் கதாபாத்திரங்களையும் நன்கு கவனித்த பின்னரே, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் வெளியான, கங்குபாய் கத்தியவாடி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த படம் தமிழில் ரீமேக் ஆனால் கங்குபாய் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் நடிப்பை பொருத்தவரை, நயன்தாரா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் விதம் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும், அதே பாதையில் அவரை முன் மாதிரியாக கொண்டு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார் வாணி போஜன்.