சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இன்று சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. வாணி போஜனின் மிரட்டலான நடிப்பில் வெளியான செங்களம் வெப்தொடருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பேச்சுலர் பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து மனம் திறந்துள்ளார். பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் வாணி போஜன் தான் நடிக்க இருந்தார். ஆனால், படத்தில் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும். சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வாணி போஜனுக்கு இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் வந்துள்ளது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசித்த அவர், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.