இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ரொம்பவே சாப்ட்டான படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குனர் விஜய் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது அதிரடி ஆக்சன் படமாக இயக்கியுள்ள படம் மிஷன் சாப்டர் 1. அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு முதலில் அச்சம் என்பது இல்லையே என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.. பின்னர் தற்போது இந்த படத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இதன் டைட்டில் மிஷன் சாப்டர் 1 என மாற்றப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மதராசபட்டணம் படம் மூலம் இயக்குனர் விஜய்யால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட எமி ஜாக்சன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் விஜய்யின் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. அந்தவகையில் தற்போது அருண்விஜய் இந்த படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.