லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தமிழ்திரை உலகில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரு கவர்ச்சிகரமான நடிகையாகவே வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. அதேசமயம் மலையாளத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமி, அங்குள்ள முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக தலா 5 படங்களில் நடித்துள்ளார் என்பதே மிகப்பெரிய சாதனை தான். சமீபத்தில் கைதி ரீமேக்காக ஹிந்தியில் வெளியான போலா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் ராய் லட்சுமி.
இந்தநிலையில் தற்போது கவர்ச்சிக்கு தற்காலிகமாக குட்பை சொல்லிவிட்டு மலையாளத்தில் டிஎன்ஏ என்கிற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் பெரிய அளவில் மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமலேயே நடிக்கிறார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் அதற்கான உடல் மொழியை கொண்டு வருவதற்காக மெனக்கெட்டு வருகிறார் ராய் லட்சுமி. இந்த படத்தை டி.எஸ் சுரேஷ்பாபு என்பவர் இயக்குகிறார் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக இந்த படம் உருவாகி வருகிறது.