'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி |

கில்லி, வெண்ணிலா கபடிக்குழு என கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதைகளில் உருவான சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்தநிலையில், களவாணி உள்பட சில படங்களை இயக்கிய சற்குணமும் தற்போது கபடி விளையாட்டை மையமாக் கொண்ட ஒரு கதையை பெத்தேரி என்ற பெயரில் இயக்குகிறார்.
ராஜ்கிரண் கபடி கோச்சாக நடிக்கும் இந்த படத்தில் சற்குணம் இயக்கிய சண்டிவீரன் படத்தில் நடித்த அதர்வா நாயகனாக நடிக்கிறார். அதனால் தற்போது அதர்வாவுக்கு ஒரு கோச் மூலம் கபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கபடி விளையாட்டு பின்னணியில் பல படங்கள் வந்துள்ளதால் அந்த படங்களில் சொல்லப்படாத சில கபடி விளையாட்டின் சூட்சுமங்களை இந்த படத்தில் சொல்லப்போகிறாராம் சற்குணம்.




