சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கோவை தமிழச்சியான அதுல்யா ரவி, நாடோடிகள்-2, அடுத்த சாட்டை, ஏமாளி, கேப்மாரி என சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாதபோதும், ரசிகர்களை கவர்ந்த நடிகையாகி விட்டார் அதுல்யாரவி. தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த அதுல்யா, எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான படங்கள் தன்னைத்தேடி வராததால் என்னவோ இன்ஸ்டாகிராமில் கிளமராக உடையணிந்து கிக்கான போஸ் கொடுக்கும் போட்டோக்களை பதிவிட தொடங்கி உள்ளார். அதுல்யாவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் அவரின் அழகை வர்ணித்து வருவதோடு என்ன ஒரு மாற்றம் என கருத்து பதிவிட்டுள்ளனர்.




