ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும், ஏஆர் ரஹ்மானும் சாதனையாளர்களாக பார்க்கப்படுபவர்கள். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா, ஆஸ்கர் விருது வாங்கியவர் ரஹ்மான்.
இளையராஜாவிடம் பணி புரிந்தவர் தான் ரகுமான் என்பதும் பலருக்கும் தெரியும். கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. அவர் கொடுத்த பேட்டியை பலரும் பதிவிட்டார்கள்.
அவரது பேட்டியில் பேசியதில் முக்கியமான விஷயமாக, “ஒரு பாடல் புதிதாக பூத்த மலர் போன்று இருக்க வேண்டும்,” என்பது பலராலும் ரசிக்கப்பட்டது. ஒரு பாடலும், இசையும் எப்படி இருக்க வேண்டும் என்றும் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் ஏஆர் ரஹ்மான், இளையராஜாவின் பேட்டியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இளையராஜா பேட்டியை ரஹ்மான் டுவீட் செய்தது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்து. பலரும் அதைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்களில் இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷும் ஒருவர். ரஹ்மானின் டுவீட்டை ரிடுவீட் செய்த தனுஷ், அதில், “இந்த டுவீட்டும், டுவீட்டுக்குள் இருக்கும் விஷயமும்...'” எனக் குறிப்பிட்டு கை கூப்பும் எமோஜியையும், ஹாட்டின் எமோஜியையும் போட்டுள்ளார். இளையராஜா, ரஹ்மான் இருவரையும் மதிக்கும் தனுஷின் பதிவுக்கும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.