ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், அவரால் முன்னனி நடிகையாக முடியவில்லை. இந்த நிலையில் அனிமல் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி இணைந்துள்ளார் என அறிவித்திருந்தனர். இவர் அல்லாமல் மிருணாள் தாக்கூர், சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என தகவல்கள் வெளியானது. இப்போது இவர்களுடன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனும் இணைந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




