2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இந்த வாரம் தனுசின் இட்லி கடை(நாளை), ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 (நாளை மறுதினம்) வருகிறது. இட்லிகடை பக்கா தமிழ் படம். காந்தாரா கன்னட படமாக இருந்தாலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வருகிறது. சென்னையில் பாடல் வெளியீட்டு விழா மதுரை, திருச்சி, கோவையில் பட பிரமோசன் என்று இட்லி கடையை விளம்பரப்படுத்தி உள்ளார் தனுஷ். ஆனால், காந்தாரா குழு சென்னைக்கு வரவில்லை. மற்ற மாநிலங்களில் பட விளம்பரத்துக்காக சென்றவர்கள், சென்னைக்கு வரும்போது கரூர் துயரம் நடக்க, நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டனர்.
காந்தாரா முதற்பாகத்துக்கு தமிகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாலும், காந்தாரா 2 குறித்த தகவல்கள் மக்களிடம் நன்கு போய் சேர்ந்து இருப்பதாலும் தமிழகத்தில் பிரமோசன் தேவையில்லை என்று படக்குழு நினைக்கிறது. தவிர, படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டதால் தமிழகத்தில் படம் ஓடாவிட்டாலும் அவர்களுக்கு கவலையில்லை என்ற நிலை.
ஆனால், தமிழில் குபேரா வெற்றி பெறாத நிலையில், ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். அதேசமயம், கடந்த சில வாரங்களாக எந்த படமும் ஓடாத நிலையில் ஆயுதபூஜை ரிலீசுக்கு இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்கள் வருவதால் தியேட்டர்கள் சில நாட்கள் நிரம்பும், ஓரளவு வசூலை அள்ளலாம் என்று தியேட்டர் அதிபர்கள், சம்பந்தப்பட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
யார் ஜெயிக்கிறார்கள் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.