பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” |

காந்திஜியின் பேரனான ராஜ்மோகன் காந்தி பூனாவிற்கு அருகில் பஞ்சகனி என்ற ஊரில் “மரல் ரீ ஆர்மமெண்ட்” என்ற ஒரு ஸ்தாபனத்தை நடத்தி வந்தார். இந்த ஸ்தாபனத்தின் நிறுவனரான புக்மேன் என்ற அமெரிக்கர் எழுதிய ஒரு நாடகம்தான் “பர்காட்டன் பேக்டர்” என்ற மேடை நாடகம்.
பொதுவாகவே ஏ வி மெய்யப்ப செட்டியார் நிறைய நாடகங்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டவர். அவரது திரைப்படங்களுக்கான கதையை கூட சில வெற்றி பெற்ற நாடகங்களிலிருந்தும் பெற்றிருக்கின்றார். கம்யூனிச எதிர்ப்புக் கதையான அமெரிக்கர் புக்மேன் எழுதிய “மறக்கப்பட்ட உண்மை” என்ற இந்த “பர்காட்டன் பேக்டர்” என்ற நாடகத்தையும் திரைப்படமாக எடுக்க ஆசைபட்டிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
மறைந்த முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரை 1967 தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி சபை அமைத்திருந்த வேளையில், “மரல் ரீ ஆர்மமெண்ட்” ஸ்தாபனத்தின் இந்தியத் தலைவரான ராஜ்மோகன் காந்தி ஏ வி மெய்யப்ப செட்டியாரை சந்திக்க வந்திருந்தார். இந்த “மறக்கப்பட்ட உண்மை” என்ற நாடகத்தை உங்கள் குழுவினர் நடித்துக் காட்ட வந்திருக்கிறீர்கள்.
ஜனங்களின் மனதில் உயர்ந்த கருத்துக்களை புகுத்த வேண்டுமென்று விரும்பி இந்த நாடகத்தை நடத்தும் நீங்கள், ஒரு நாளைக்கு ஒரு ஊரில்தான் இந்த நாடகத்தை உங்களால் அரங்கேற்றம் செய்ய முடியும். இதையே நீங்கள் தமிழில் சினிமாவாக எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் வீதம் காட்டச் செய்தால், அதை கோடிக்கணக்கான பேர் பார்த்து ரசிக்கலாம் அல்லவா? மேலும் சினிமாவில் க்ளோஸ் அப் ஷாட்களின் மூலம் இந்தக் கதையின் முக்கிய காட்சிகளை எல்லாம் மிக அருமையாகவும் எடுக்கலாமே? என ஏ வி மெய்யப்ப செட்டியார் கூற, அதற்கு நீங்களே எடுத்துக் கொடுக்கலாமே என்று ராஜ்மோகன் சொல்ல, என் ஸ்டூடியோ, பிலிம், டெக்னீஷியனஸ்; என அனைத்தையும் இந்த “பர்காட்டன் பேக்டர்” கதையை தமிழில் சினிமாவாக தயாரிப்பதாக இருந்தால் தருகிறேன் என கூறிய ஏ வி மெய்யப்ப செட்டியார், ஒரு முக்கியமான கண்டிஷன் ஒன்றையும் சொல்லியிருக்கின்றார்.
இந்தக் கதையை வேறு யாரும் சினிமாவிற்காக எழுதினால் சரிபட்டு வராது. நீங்கள் அடுத்த முறை இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்யும்போது எங்களுடைய முதல்வர் சி என் அண்ணாதுரையை வரவழைத்து பார்க்கச் செய்துவிட வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் இந்த நாடகத்தின் ஆழ்ந்த கருத்தைத் தமிழக மக்களுக்கு ஏற்றபடி எழுதி, விளங்க வைக்கும் ஆற்றலும், மனப்பக்குவமும் உண்டு. எனவே நீங்கள் வேறொன்றும் செய்ய வேண்டாம். எப்படியாவது நாடகத்தை அவர் நேரில் வந்து பார்க்கச் செய்துவிடுங்கள் பின் அவரே உங்களை அழைத்து, கதை வசனம் எழுதித் தருவதாக கூறுவார்.
அந்த நம்பிக்கை எனக்குண்டு என ஏ வி மெய்யப்ப செட்டியார் கூறியதோடு, இந்தக் கதையில் முதலாளியின் மகனாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், முதலாளிக்கு எதிராக வேலை செய்யும் தொழிலாளியாக மக்கள் திலகம் எம் ஜி ஆரையும் இணைந்து நடிக்க வைக்க என்னால் முடியும். அண்ணா இந்த மாதிரி ஒரு கதைக்கு வசனம் எழுதப் போகிறார் அதனால் நம் நாட்டு மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கப் போகிறது என்று உணர்ந்து அந்த இரண்டு நடிகர்களும் பணம் வாங்காமலேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள் என்றிருக்கின்றார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
அதன்படியே அடுத்த முறை சென்னை மியூசிக் அகாடமியில் “மறக்கப்பட்ட உண்மை” நாடகம் அரங்கேற்றமானபோது, ராஜ்மோகன் காந்தியே நேரில் சென்று முதல்வர் அண்ணாதுரையை அழைக்க, அவரும் வருவதாக ஒத்துக் கொண்டு, பின் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரால் வர இயலாமல் போனது. நம் நாட்டின் துரதிர்ஷ்டம், தமிழில் நான் நினைத்தபடி இந்தக் கதையை அறிஞர் அண்ணா வசனம் எழுதி, எம் ஜி ஆரையும், சிவாஜியையும் சேர்ந்து நடிக்க வைத்து, மிகுந்த பயனுள்ள ஒரு படம் என்னால் எடுக்க முடியாமல் போய்விட்டது. அந்த வருத்தம் இன்றுவரை நீங்கவில்லை என்று 1974ல் வெளிவந்த “எனது வாழ்க்கை அனுபவங்கள்” என்ற நூலில் ஏ வி மெய்யப்ப செட்டியார் கூறியிருக்கின்றார்.