'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு. இந்த படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும் வடிவேலு, கவுதம் மேனன், நலன் குமாரசாமி இயக்கும் படங்களிலும் நாயகனாக நடிக்க பேசி வருகின்றனர்.
இதில், நலன் குமாரசாமி பல ஆண்டுகளுக்கு முன்பே வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் அந்த முயற்சியை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலுவை காமெடி கலந்த ஒரு கதையில் இயக்க ஸ்லிரிப்ட் தயார் செய்துள்ளார் நலன் குமாரசாமி.
அதேப்போன்று தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனனும் வடிவேலுவுக்காக காமெடி கலந்த ஒரு காதல் கதையை தயார் செய்திருக்கிறாராம். அதனால் அடுத்தபடியாக இந்த இரண்டு இயக்குனர்களின் படங்களிலும் வடிவேலு நடிக்கலாம் என கூறப்படுகிறது.