காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சென்னையில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய நடிகர் வடிவேலு "இப்போது
பெரிய கலைஞர்கள் சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூப்பில் தவறாக பேசுகிறார்கள். அண்ணன் நடிகர் சிவகுமார் குறித்தும் பேசினார். நடிகர் சங்கம் இருக்கிறதா என தெரியலை.அவங்களுக்கு ஆப்பு வைக்கணும்.
சில தயாரிப்பாளர்கள் மற்ற படம் ஓட கூடாது என பணம் கொடுத்து சிலரை பேச வைக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் இதை செய்ய சிலர் இருக்கிறார்கள். கேரளாவில் இப்படி பேசினால் பிதுக்கிவிடுவார்கள். மசாலா போட்டு விடுவார்கள். இந்த விஷயத்தில் போர் கால நடவடிக்கைகள் எடுக்கணும் தவறாக பேசுபவர்கள் தூங்காமல் துடிக்கணும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கணும்.
இன்னும் சிலர் வாய் மீது மைக் வைத்து, கருத்து கேட்டு ஒரு படத்தை தவறாக பேசுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் இருந்து வார்த்தை புடுங்கி காசு பார்க்கிறார்கள். ஒரு 10 பேர் சினிமாவை அழிக்கிறார்கள். கேமரா பார்த்து சிலர் இப்படி பேசுகிறார்கள். அவர்கள் வார்த்தையை மாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கைகள் எடுக்கிறதோ இல்லையோ , நடிகர் சங்கம் எடுக்கணும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் வடிவேலு பேசினார்.
அதற்கு பதில் அளித்த நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ், ''அண்ணன் கோரிக்கை ஏற்று அவர்கள் பிதுக்கப்படுவார்கள், மசாலா தடவப்படும்'' என்றார்.