பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான படம் 'தாய் கிழவி'.
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பிப்ரவரி 20ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், நேற்று திடீரென படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து பிப்ரவரி 27ம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்கள்.
படத்திற்கான புரமோஷன்களில் படக்குழு தீவிரமாக இருந்த நிலையில் இந்த திடீர் ஒத்தி வைப்பிற்கான காரணம் குறித்து விசாரித்தோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கிய வினியோகஸ்தர் ஒருவர், அட்வான்ஸ் தொகையை மட்டுமே கொடுத்துள்ளாராம். நேற்று வரையில் மீதித் தொகையைத் தரவேயில்லையாம்.
படத்தை வேறு ஒரு முன்னணி நிறுவனத்திற்குக் கொடுத்துவிடலாம் என சிவகார்த்திகேயன் ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர்களுக்குள் இது குறித்து கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மீதித் தொகை வராமல் படத்தை எப்படி வெளியிடுவது என ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்தார்களாம்.
இப்போதெல்லாம் அறிவித்த தேதியில் படங்களை வெளியிடாமல் மாற்றி மாற்றி வெளியிடுவது வழக்கமாகப் போய்விட்டது.