ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து காதலன், மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களில் கலகலப்பான படங்களில் நடித்தனர். இவை அல்லாமல் பிரபுதேவா இயங்கிய போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு காமெடியில் பட்டைய கிளப்பி இருப்பார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபுதேவா,வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர் . இந்த படத்தை இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். இதனை துபாய் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு 'பேங் பேங்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புரோமொ வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இது ஜாம்பி வகையிலான காமெடி ஜானரில் உருவாகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.