அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

‛ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை' போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2024ம் ஆண்டு திடீரென உடல்நலப் பிரச்னையால் காலமானார். இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் "கெணத்த காணோம்". இதில் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கிறார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
மண் சார்ந்த கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த சமூக இயக்கவியல் மற்றும் நுட்பமான படமாக உருவாகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சுரேஷ் சங்கையா உயிருடன் இருந்தபோதே இப்படம் தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‛கண்ணும் கண்ணும்' படத்தில் வடிவேலு அலப்பறை செய்த ‛கெணத்த காணோம்...' காமெடி காட்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தான் இப்போது இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.