ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி | ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா | ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் |

ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர். சி இயக்குகிறார்; ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். 2027ம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், குறிப்பாக ஹீரோயின், காமெடியன், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
ரஜினி , கமல் இணையும் படம் என்பதால் அதில் நடிக்க, அதில் பங்கேற்க பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்களாம். குறிப்பாக சுந்தர்.சி படம் என்பதால் காமெடி தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிப்பாரா அல்லது யோகிபாபு, சந்தானம் இவர்களில் யாராவது ஒருவர் காமெடியனா? அல்லது வேறு யாரும்? அல்லது இவர்கள் அனைவருமே இணைந்து நடிக்கும் வகையில் ஸ்கிரிப்டை சுந்தர் சி உருவாக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் ஹீரோயின் யார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்பொழுது மூக்குத்தி அம்மன் பார்ட் 2வை இயக்கி வரும் சுந்தர் சி, விரைவில் ரஜினி பட நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா என்ற கேள்வியும் இணைந்துள்ளது. நேற்றைய அறிவிப்பில் கமல்ஹாசன் நடிப்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும் கண்டிப்பாக கவுரவ வேடத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல் சுந்தர் சி யும் ஒரு நடிகர் என்பதால் அவரும் ஒரு காட்சியில் வருவார். கடந்த சில சுந்தர் சி படங்களில் குஷ்பு இருக்கிறார், பாடலுக்கு ஆடி இருக்கிறார். ஆகவே அவரும் இருக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இதுபோக ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் தாங்கள் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சுந்தர்.சி.,க்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்களாம். பட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இருந்து ரஜினி - கமல் - சுந்தர் சி இணையும் படம் கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.