'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார். ஏழு கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், இவானா, ராதிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி இருப்பதாகவும், அதில் வருண் தவான் நாயகனாக நடிக்க, பிரதீப்பே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார் போனி கபூர்.
அவர் வெளியிட்ட பதிவு : 'லவ் டுடே' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.