ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே நடித்திருக்கிறார். இப்படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களுடன் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து கொண்டு இருக்கிறது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இதுவரை 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த லவ் டுடே படத்தை பார்த்த ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார்.
அவரை தொடர்ந்து தற்போது சிம்புவும் அவருக்கு கால் செய்து பாராட்டியதோடு, ஒரு பூங்கொத்து அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு, அன்புள்ள பிரதீப் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிம்பு அனுப்பிய பூங்கொத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.